tamilnadu

img

சூடான் சரக்கு விமானம் விபத்து- 18 பேர் உயிரிழப்பு

சூடானில் ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
சூடானில் மருத்துவ பொருட்களுடன் ராணுவ சரக்கு விமானம் ஒன்று நேற்று எல் ஜெனீனா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த விமானம் மேற்கு டார்பூரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 நீதிபதிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 
இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல்fகள் இதுவரை வெளியாகவில்லை.