சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் உள்ள எரிவாயு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.