சிவகாசி, அக்.17- சிவகாசி அருகே ரெங்கபாளையம், கிச்சநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 11 பெண் தொழிலாளர்கள் உட்பட 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரி ழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது ரெங்கபாளையம். இங்கு. திருத்தங்கல் கோபால் நகரைச் சேர்ந்த சுந்தமூர்த்தி என்பவருக்கு சொந்த மான கனிஷ்கா பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீ பரவுவதை தடுத்து நிறுத்தினர்.
14 பேர் பலி
எனினும் இந்த விபத்தில் அழகாபுரி காந்தி நகரைச் சேர்ந்த முனியப்பன் மனைவி அனிதா (40), லட்சுமியாபுரம் பகுதியச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பாக்கியம் (35), அதே பகுதியைச் சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள் (55), வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த சீனிராஜ் மனைவி மகாதேவி (50), அதே பகுதி யைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பஞ்வர்ணம் (35), முத்துராஜ் மகன் பாலமுருகன்(30), தாளமுத்து என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டி யைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி முனீஸ்வரி (32), செவலுர் அசேபா காலனி யைச் சேர்ந்த மகேந்திரன் தங்கமலை (33), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த முரு கானந்தம் மனைவி இந்திரா (50), காளி ராஜன் மனைவி லட்சுமி(28), மூவரை வென்றான் முனியாண்டி மனைவி செல்லம்மா (40), குருகலாஞ்சி மனைவி முத்துலட்சுமி (36) ஆகியோர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம்
அழகாபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாயி (45). கிருஷ்ணன்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சின்னத்தாய்(34) ஆகியோர் படுகாயமடைந்தனர், இவர்கள் இருவரும் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, கிச்சநாயக்கன்பட்டியில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவருக்கு சொந்த ஆர்யா பட்டாசு ஆலையிலும் செவ்வாயன்று ஏற் பட்ட தீ விபத்திலும் நதிக்குடி கிரா மத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் வேம்பு (60) பலியானார். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் எஸ்.பி., ஆய்வு விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சீனிவாச பெருமாள் ஆய்வு மேற் கொண்டார்.