tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டத்தின் நோக்கத்தை சிதைக்க முயற்சி எம்.சின்னத்துரை கண்டனம்

தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம், பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்றது.  வி.தொ.ச பேராவூரணி ஒன்றியப் பொறுப்பாளர் ஆர்.மாணிக்கம் கூட்டத் திற்கு தலைமை வகித்தார். சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் இளங்கோ வன் முன்னிலை வகித்தார். மாநிலச் செய லாளர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றி னார்.  அவர் பேசுகையில், நூறு நாள் வேலைத் திட்டத்தை கொண்டு வரவும், ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்கவும் கார ணமாக இருந்தது கம்யூனிஸ்ட்கள் தான். இக்காலத்தில் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் குறை வாக உள்ள சூழலைப் பயன்படுத்தி இத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வரு வதை எதிர்த்து, விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க மார்ச் 10 அன்று போராட்டம் நடத்திட சங்கம் தீர்மா னித்துள்ளது. குடிமனை, முதியோர் உதவித் தொகை பெறவும் நாம் விவசாயத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட வேண்டும் என்றார்.  கூட்டத்தில், வி.தொ.ச மாவட்டத் தலை வர் ஆர்.வாசு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். வி.தொ.ச பேராவூ ரணி ஒன்றிய நிர்வாகிகள் கே.சி.ஆவான், ஏ.ராமலிங்கம், ஏ.ராஜாமுகமது, சேதுபாவா சத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் எம்.கே.கணே சன், எஸ்.குமார், ஆர்.செந்தில்குமார், ஏ. மாரிமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பேராவூரணி வி.தொ.ச ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக கே.சி. ஆவான், செயலாளராக கார்த்திக், பொரு ளாளராக மாரிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்களாக உலகநாதன், பழனி யப்பன், கோ.மாணிக்கம், டி.திருஞானம் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட னர்.  கூட்டத்தில், “தேசிய ஊரகத் திட்டத்தில் வேலை கேட்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதி களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். குடிமனை, குடிமனைப் பட்டா அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;