tamilnadu

திருப்பூர் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி: தொழிற்சங்கங்கள் நன்றி

திருப்பூர், ஜன. 8 – திருப்பூரில் ஜனவரி 8ஆம் தேதி அகில  இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டத்தை மகத் தான வெற்றி பெறச் செய்த அனைத்துத் தரப்பினருக்கும் தொழிற்சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் க. ராமகிருஷ்ணன், ஐஎன்டியுசி தலைவர் அ. பெருமாள், எச்எம்எஸ் செயலாளர் ஆர். முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மனோ கரன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை யில் கூறியிருப்பதாவது:  மத்திய அரசு பொதுத்துறை பங்கு களை தனியாருக்குத் தாரை வார்ப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை பெருமுத லாளிகளுக்கு ஆதரவாக நவீன கொத்தடி மைகளாக தொழிலாளர்களை மாற்றும் விதத்தில் மாற்றம் செய்திருப்பது, முறைசா ராத் தொழிலாளர்களின் சமூக நலத் திட்டங் களை வெட்டிச் சுருக்குவது, பொது மக்களை கடுமையாக பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறுவது, வேலை யில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது ஆகியவற் றைக் கண்டித்தும், 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18ஆயி ரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதன்கிழமை நாடு தழு விய பொது வேலைநிறுத்தப் போராட் டத்தை நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த அழைப்பை ஏற்று திருப்பூர் மாந கரில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலுமி ருந்து பனியன், நூற்பாலை, விசைத்தறி, பாத்திரம், கட்டுமானம், சாலைப் போக்கு வரத்து, சுமைப்பணி, சாலையோர வியா பாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழி லாளர்களும் இப்போராட்டத்தில் முழுமை யாகப் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள் ளனர். அத்துடன் இந்த போராட்டத்துக்கு ஆதர வாக கடையடைப்பு நடத்தும்படி அனைத்து வணிக, வியாபார அமைப்புகளுக்கும் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத் திருந்தன. இந்த வேண்டுகோளை ஏற்று திருப்பூரில் கடையடைப்புப் போராட் டம் வெற்றிகரமான முறையில் நடத்தப் பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம். தொழிற்சங்கங்களின் போராட்டத் துக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றின் நிர்வாகிகள், ஊழி யர்கள் ஆதரவு தெரிவித்து மறியல் போராட் டங்களிலும் பங்கேற்று கைதாகி உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் இப்போராட்டத்தில் முழுமை யாகப் பங்கேற்றுள்ளனர். சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இந்த அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்த அனைத்து தரப்பினருக்கும் திருப்பூர் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவிக்கிறோம். தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழில் துறை, வர்த்தகத் துறையினர் மற்றும் கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் உள்பட ஒட்டு மொத்த மக்களின் உணர்வும் மத்திய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைக ளுக்கும் எதிராக ஒருமுகமாக திரண்டிருப் பதை இந்த வேலைநிறுத்த, கடையடைப்புப் போராட்டம் தெளிவாக உணர்த்தியுள்ளது. எனவே இதை கவனத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் விரோ தமான கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்என தொழிற்சங் கங்கள் வலியுறுத்துவதாக இந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

;