tamilnadu

வைகையாற்றில் மணல் கொள்ளை

சிவகங்கை, மார்ச் 8- மானாமதுரை வைகை ஆற்றில் தொடரும் மணல் கொள்ளைiயை தடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாட்சியர், காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, ஒன்றியக்குழு உறுப்பினர் முனியராஜ், சுந்தர்ராஜன் ஆகியோர்  கூறியதாவது:- மானாமதுரை வைகை ஆற்றில் ஆதனூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணையின்  வலது பக்கத்திலிருந்து  கரி சல்குளம் கிராமத்திற்கு ஒரு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை   உடைத்து வைகை ஆற்றுக்குள் வருவதற்கு பாதை அமைத்துள்ளனர். இதே போல் பாத்திபனூர் அணைக்கு செல்வதற்கும்  பாதை அமைத்து மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஞாயிறன்று பகல் ஒரு மணியளவில் சிலர் சாக்குளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். சிலர் மணலை வெட்டிக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக வட்டாட்சியர், பொதுப் பணித்துறையினர், காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றனர்.