சிவகங்கை, ஜூன் 3- சிவகங்கை அருகே சங்கட்டியில் வைகையில் மணல் அள்ளிக்கொண்டு வந்த எட்டு லாரிகளை சிவகங்கை வட் டாட்சியர் மைலாவதி பறிமுதல் செய் துள்ளார். லாரிகள் பிடிபட்டது குறித்து தகவலறிந்த ஆளும் கட்சியினர் எனக் கூறிக்கொள்வோர் கார்களில் படையெ டுத்து வந்து வட்டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நிர்ப்பந்தம் கொடுத்தனர். ஆனால் வட்டாட்சியர் தமது நடவடிக்கை யிலிருந்து பின்வாங்கவில்லை. ஆளும் கட்சியால் அனைத்து நிர்வா கமும் கட்டிப்போடப்பட்டுள்ளது. மணல் கொள்ளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சகாயம் போன்ற ஐஏஎஸ் அதிகாரி நியமித்து கண்காணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர பாண்டி அரசை வலியுறுத்தியுள்ளார்.