சிவகங்கை, ஜூலை 9- சிவகங்கை மாவட்டம் தாயமங்க லம் திருவிழாவிற்க்கு வந்த சர்க்கஸ் தொழிலாளர்கள், வளையல் பாசி விற் பனை செய்யும் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கால் தொழில் முடக்கத்தின் கார ணமாக வருமானத்திற்கு வழியில்லாமல் குழந்தைகளோடு கஷ்டப்பட்டு வரு கிறார்கள். இவர்களுக்கு மத்திய அர சின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட சைல்டுலைன், ஐஆர்சிடிஎஸ் நிறுவனத்தின் சார்பில் அரிசி பருப்பு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் 50 குடும்பங்களுக்கு வழங் கப்பட்டது. நிகழ்வில் மாவட்டக் குழந்தை கள் நலக்குழுத் தலைவர் ராமநாதன், சைல்டு லைன் இயக்குநர் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பி னர்கள் ரமேஷ், ரசீந்திரகுமார், குடும்ப நல ஆலோசகர்கள் ரவி, சுகன்யா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, ஆலோசகர் ஜூலியட்வனிதா, சைல்டு லைன் உறுப்பினர்கள் ராமர், குமாரி, கார்த்திகேயன், மலைக்கண்ணன், சர வணன், சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆன்டிஜென் சோதனை