tamilnadu

img

கொரோனாவால் வேலை இழப்பு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை கார், வேன் ஓட்டுநர்கள் வேதனை

தஞ்சாவூர், ஜூன் 29- மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை மாவட்டம் பேராவூ ரணியில் வாடகைக் கார், வேன் ஓட்டு நர்கள், உரிமையாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து கோரிக்கைகளை வலி யுறுத்தி, சமூக இடைவெளியைப் பின்பற்றி இணையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  “தமிழகத்தில் பேட்ஜ் லைசென்ஸ்  பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்க ளுக்கும் கொரோனா கால இழப்பீடாக ரூ.25,000 வழங்க வேண்டும். பொது பயன்பாட்டு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ-களுக்கு விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை யை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு  வர வேண்டும். வாடகை வாகனங்க ளுக்கு அரசு சார்பில் மானிய விலையில்  நாளொன்றுக்கு 20 லிட்டர் டீசல் வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கால் டாக்ஸி மற்றும் மேக்சி  கேப் வாகனங்களுக்கு முறையான கட்ட ணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.  அனைத்து வாகன ஓட்டுநர்கள், உரி மையாளர்களுக்கு அரசு சார்பில் கோ விட்-19 இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.  ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட காலாண்டு சாலை வரி களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சங்கத் தலைவர் சுப.சரவணன்,  செயலாளர் ஏ.எஸ்.நீலகண்டன், பொரு ளாளர் ஆர்.கஜேந்திரன், துணைத் தலை வர் கே.முத்தமிழ், துணைச் செயலாளர் ஆர்.கே.ரெங்கசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;