சிவகங்கை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் அரு.கமலம் ஞாயிறன்று கண்டரமாணிக்கத்தில் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர் அரு.மோகன். இவர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர்தாயார் அரு.கமலம் 82 வயது. அரு.கமலத்தின்
தந்தை எஸ்.கிருஷ்ணன் சுதந்திரப்போராட் டத்திலும், கம்யூனிச இயக்கத்திலும் முழுமையாக ஈடுபட்டவர். சுதந்திரப்போராட்ட காலத் தில் சென்னையிலிருந்து மதுரைக்கு நடந்தேவந்தவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் திருச்சி சிறையிலிருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட தோழர்கிருஷ்ணன். தலைமறைவாக இருந்தபோது குடும்பத்திற்கு போலீஸ் தொல்லை கொடுத்தது. அப்போது விருதுநகரில் தோழர் கிருஷ்ணன் மகள் அரு.கமலா தனது 12வது வயதில் தலைமறைவு கட்சித் தோழர்களோடு இருந்திருக்கிறார். தோழர் ஆர்.எச்.நாதன்எம்.வி.சுந்தரம் மற்றும் தோழர்கள் தங்கியிருந்தவீட்டில் கமலா இருந்து கட்சிக்கு உதவியிருக்கிறார். பள்ளிக்கூட மாணவியாக நடித்து கம்யூனிசதலைவர்களுக்கு கூரியாக செயல்பட்டிருக்கிறார். கைது செய்து சிறையிலிருந்த தோழர் களை அடையாளம் காண்பிக்க அரு.கமலாவை அழைத்து சென்று சொல்லச் சொல்லும்போது தோழர்களை யாரென்று தெரியாது எனதைரியமாக கூறிவிட்டார்.
கண்டரமாணிக்கத்தில் கஞ்சித்தொட்டி நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் அரு.கமலாஇயக்கப் பாடல்கள் பாடியுள்ளார். தியாகி பாலுவை தூக்கில் போடும் போது அந்த கொடுமையை எதிர்த்து சிறையில் நடந்த போராட்டத்தில் கண்டரமாணிக்கம் அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ராமானாதன், தக்கான் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அப்போது சிறைக்குள் நடந்த போராட்டத்தில் சிறையில் நடந்த தடியடியில் நாச்சியார்புரம் ராமனாதனை அடித்து கொன்ற கொடுமையை விளக்கும் பாடல்களை தோழர் கமலாமார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பாடி பிரச்சாரம் செய்தார்.
புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியாக கண்டரமாணிக்கம் இருந்தது. அப்போது தோழர் ஆர்.உமாநாத்போட்டியிட்ட போது தேர்தல் பணியாற்றியிருக்கிறார். விடுதலைப்போராளியின் வாழ்க்கைப் பயணம் என்ற நூலை எழுதிய தோழர் எம்.வி.சுந்தரம் தோழர் அரு.கமலாவின் சிறப்பான பணியை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய விபரம், கமலா எங்கள் வீட்டில் இராஜபாளையத்தில் இருந்து வருகிறாள். எங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையாக வளர்ந்து வருகிறாள். படிக்க வைத்து உயர்த்திட வேண்டும்என்று நினைக்கிறேன் என்று என்னிடம் தானாகப் பேசிக் கொண்டிருந்தார்.சப்இன்ஸ்பெக்டர் ராமையாபிள்ளை.நான் ஒன்றும் பேசாது உட்கார்ந்திருந் தேன். பின்பு சப் இன்ஸ்பெக்டர் ராமையாபிள்ளை, கமலாவிடம் பேச ஆரம்பித்தார்.என்ன கமலா, இவரைப்(எம்.வி.சுந்தரத்தை) பார்த்தாயா? என்று கேட்டார்.ஆம் என்று சுருக்கமாக கமலாவின் பதில் இருந்தது. இவரைத் தெரியுமல்லவா? என்று கேட்டார். அதற்கு ஆம் என்ற பதில் தான்வந்தது.குருநாதன் கோவில் தெரு வீட்டில் இவரோடுதானே நீ இருந்து வந்தாய்? என்று கேட்டார். என்னோடு இவர் இருக்கவில்லை என்ற பதில் உடனே வந்தது. தெரியும் என்றுசொன்னாயே? என்ற பதட்டத்துடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
பார்க்கச் சொன்னீர்கள் பார்த்தேன். அதனால் தெரியும் என்று சொன்னேன். எங்கேபார்த்தாலும் இவரைத் தெரிந்து கொள்வேன்என்று விரிவான பதில் கமலாவின் வாயிலிருந்து வந்தது.இதற்கு முன்பு இவரைப் பார்த்தது கிடையாதா? என்று கேட்டார். இப்போதுதான் பார்த்தேன். இனி எப்போதும் தெரியும் என்பதுகமலாவின் பதில்.ஏமாற்றமடைந்த போலீஸ் அதிகாரிகோபமடைந்த சப் இன்ஸ்பெக்டர் கமலாவின் கையைப்பிடித்து பரபரவென்று இழுத்துச்சென்றார். எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு நிகழ்ச்சி போல நான் (எம்.வி.சுந்தரம்) நடந்து கொண்டேன். எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த போலீஸ் காரர்கள்கமலாவின் பேச்சை முற்றிலும் நம்பினார்கள். எந்தவிதமான மனப்பிரதிபலிப்பும் இல்லாது நான் இருந்தது அவர்களின் நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது.ஆனால் சிறுமி கமலா தன் தந்தையின், தன் தாயாரின் பெருமையை உயர்த்தி விட்டாள். எங்களோடு கமலா இருந்த போது மிகத் துடுக்காகவும், குத்தலாகவும் பேசக் கூடிய சிறுமி.
அதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.சிறுமி கமலாவின் திறமை கண்டு நான்பெருமை அடைந்தேன். என்னுடைய புரட்சிகரத் தன்மையும் மேலும் முதிர்ச்சி அடைய உதவியாக இருந்தது.தோழர் கமலம் குடும்பத்தில் அனைவருமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள். கமலம் தனது குழந்தைகளை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக உருவாக்கினார். இவர் மாதர் சங்கத்தில் கல்லல்ஒன்றிய செயலாளர் பொறுப்பு வகித்துள்ளார்.ஒன்றிய கவுன்சிலராக இருந்த கமலம் ஒன்றியசேர்மன் பதவிக்கு ஆதரவு அளிக்க ஒரு லட்சம்ரூபாய் கொடுத்தபோது வாங்க மறுத்தவர். மேலும் ஒன்றியக்கவுன்சிலர் நிதியில் எந்த கமிசனும் வாங்காதவர். .இவரது குடும்பத்தில் நான்காம் தலைமுறையும் கட்சியில் செயல்படுகிறார்கள். தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தீக்கதிர் வண்ணக்கதிரில்எழுதிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் தொடரில் தோழர் கமலம் தியாக வரலாறை பதிவு செய்துள்ளார்.இவரது இறுதி நிகழ்வு கண்டரமாணிக்கத்தில் உள்ள தோழர் மோகன் வீட்டில் 24ம்தேதி அன்றுமாலை 4மணிக்கு நடைபெற உள்ளது.
கே.பாலகிருஷ்ணன்
தோழர் அரு.கமலம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்தார்.