tamilnadu

img

கீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு


கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாய்வில் பழங்கால இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
திருபுவனம் அருகே அமைந்துள்ள கீழடியில் பண்டைய தமிழர் மக்களின் சீரிய நாகரிக இருந்ததற்கான அடையாளங்கள் மற்றும் ஆதாரங்களைக் உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
முதல்கட்ட அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, மண் பானை ஓடுகள், சிற்பங்கள் உள்ளிட்ட 6000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து 2016ம் ஆண்டு இரண்டாவது கட்டமாகவும், 2017ம் ஆண்டு மூன்றாவது கட்ட அகழாய்வுகளும் நடைபெற்றன. இதிலும் கண்ணாடி துண்டுகள், பளிங்கு உடைசல்கள், கற்கள் என 1600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 
நான்காவது முறையாக நடைபெற்ற அகழாய்விலும் பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தன. இந்த நான்கு ஆய்வுகளிலும் சேர்த்து கண்டெடுத்த 14,500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு ஏக்கரில் மியூசியம் ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 5ம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு  ரூபாய் 57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 5ம் கட்ட அகழ்வாய்வுப்பணிகளை கடந்த ஜுன் 13ம் தேதி அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் துவக்கி வைத்தார். 
இந்நிலையில் 5ம் கட்ட அகழ்வாய்வுக்காக மேற்பகுதியில் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்பகுதியில் தோண்ட துவங்கியவுடன் சுமார் 1அடி இடைவெளியில் பழங்கால நீண்ட இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


 

;