tamilnadu

img

12,524 ஊராட்சிகளில் ரூ.372 கோடி சிசிடிவி கேமரா ஊழல்

சிவகங்கை:
தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கியதில் ரூ.372 கோடியே 84லட்சத்து 46,600 ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கைச் மாவட்ட செயலாளர் கே.வீரபாண்டி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளுக்கு, 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா வாங்கப் பட்டுள்ளது. ஒரு சிசிடிவியின் விலை ரூ.58,840சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிசிடிவி பொருத்தியிருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜாய் ஏஜன்சியில்457 சிசிடிவி கேமரா ரூ. 26 கோடியே 75லட்சத்து 2,780க்கு வாங்கப்பட்டுள்ளது.இதற்கு மூன்று கொட்டேசன் பெறப்பட் டுள்ளது. இந்த கொட்டேசனிலும் தேதிகுறிப்பிடவில்லை.

திருச்சிராப்பள்ளி, வயலூர் பிரதான சாலை முகவரியில் உள்ள ஜாய்ஏஜன்சி ரூ.58,840, ஈரோடு செல்வா என்டர் பிரைசஸ் ரூ.62,270, கோயம்புத்தூர் எம்எம்எம்ஏ என்டர்பிரைசஸ் ரூ.65,950 என விலை நிர்ணயம் செய்துள்ளன. இறுதியில் திருச்சிராப்பள்ளி ஜாய் ஏஜன்சியில் சிசிடிவி கேமராக்களுடன் 79.9 செ.மீ. எல்இடி தொலைக்காட்சி ஆகியவை ஓராண்டு வாரண்டியுடன் வாங்கியுள்ளனர்.சிசிடிவி கேமரா குறித்து மொத்தமாக கொள்முதல் செய்த கடையில் விசாரித்தபோது அவர்கள் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஆயிரக்கணக்கில் வாங்கும்போது ஒரு சிசிடிவியை ரூ.22 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்திற்குள் கொடுக்க முடியும். ஐந்து ஆண்டுகள் வாரண்டி கொடுக்க முடியும். ஒரு சிசிடிவி கேமரா, எல்இடி டிவிவிலை ரூ. 30ஆயிரம் மட்டுமே. ஆனால்அரசு ரூ.58,840-க்கு கொள்முதல் செய்துள்ளது. மொத்தம் 12,909 சிசிடிவி வாங்கப்பட்டுள்ளது.ஒரு சிசிடிவியில் மட்டும்பாதிக்குப் பாதி அதாவது ரூ28,840 ஊழல்நடந்துள்ளது. மொத்தம் ரூ.372 கோடியே 84லட்சத்து 660 ஊழல் நடந்துள்ளது.சிசிடிவி கேமரா வாங்கியது தொடர் பாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 ஊராட்சிகளுக்கு விற்பனை செய்த திருச்சிராப்பள்ளி ஜாய் கம்பெனியை தொடர்பு கொண்டபோது அவர்கள் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் விஜயநாதனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கூறினார். அவரிடம் கேட்டதற்கு உயரதிகாரி உத்தரவுப்படி செயல்படுத்தியிருக்கிறோம்; தரமான பொருள் வாங்கியிருக்கிறோம் என்றார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்457 சிசிடிவி வாங்கியதில் ரூ12 கோடியே85 லட்சம் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்துலஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும். இவ்வாறு கே.வீரபாண்டி கூறியுள்ளார்.

கொரோனா தகவல் பலகையிலும் ஊழல்
சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் இரண்டாயிரத்திற்க்கு மேற் பட்ட கொரானா விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 235 கொரானாவிழிப்புணர்வு பலகை வைக்கப்பட் டுள்ளது. இந்த தகவல் பலகைகளுக்கு ரூ.29 லட்சத்து 8 ஆயிரத்து 685 பட்டுவாடா செய்துள்ளனர்.

ஒரு தகவல் பலகைக்கு ரூ12,377 என பட்டுவாடாசெய்யப்பட்டுள்ளது. ஒரு தகவல் பலகையின் விலை ரூ.3,000மட்டுமே. இதில் மட்டும் ரூ.18 கோடியே75 லட்சத்து 4000 அளவிற்கு மாவட்ட அளவில் முறைகேடு நடந்துள்ளது. ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் இந்த ஊழலை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வந்துள்ளார். இதுதவிர, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்திலும் மாவட்ட அளவில் ரூ.12 கோடி ஊழல்நடந்ததாக அரசின் சமூக தணிக்கை கண்டறிந்துள்ளது. அதன் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பின்பு அவர்களுக்கே தெரியாமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் திற்கும் ரூ. 60 லட்சம் வீதம் 12 ஊராட்சிஒன்றியங்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய தலைவர்களுக்கோ, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கோ தெரியாமால் முறைகேடுகள் அரங்கேறி வருகிறது இது குறித்தும் விசாரிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச்செயலாளர் வீரபாண்டி.'

;