tamilnadu

தஞ்சையில் 4 வங்கிகளில் 37 கள்ள நோட்டுகள் காவல்துறையினர் விசாரணை

தஞ்சாவூர் டிச.29–  தஞ்சாவூர் மாவட்டத்தில், வங்கிப் பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருந்த தாக வரப்பெற்ற புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சென்னை ரிசர்வ் வங்கி கிளையில், தமிழகத்திலிருந்து பெறப்பட்டும் பணங் களை, அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்கில் இருந்து, கடந்த ஜனவரி மாதத் தில் வரப்பெற்ற பணத்தில் 3 கள்ள நோட்டுகளும், ஜூன் மாதத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் இந்தியன் வங்கிகளிலிருந்தும், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியிலி ருந்தும் வந்த பணத்தில் 28 கள்ள நோட்டு களும், ஆகஸ்ட் மாதத்தில் கும்ப கோணம் சிட்டி யூனியன் வங்கியில் இருந்து வரப்பெற்ற பணத்தில் 6 கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்த னர். இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட குற்றபிரிவு காவல்துறையில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி, காட்சி களில், யார் அதிகளவில் டெபாசிட் செய்துள்ளார்கள்? அதிக முறை  வங்கிக்கு வந்துள்ள வாடிக்கையா ளர்கள் யார்? சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது வந்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் விசா ரித்து வருகின்றனர். மேலும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து யாராவது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பும்போது கள்ள நோட்டை செலுத்தினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப் படுத்தி உள்ளனர்.

;