tamilnadu

சுழற்சி முறைகளில் பள்ளிகளை திறக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 31- அரசு ஊழியர், ஆசிரியர் மீதான நடவ டிக்கையை ரத்து செய்யக்கோரி ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாநில அளவில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பது என இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அப்பாத்துரை தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சங்கர் தீர்மானம் குறித்து பேசினார்.அப்போது 2019-ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்  மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு உயர் நிலை-மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை வெளியிட வேண்டும். சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலி யுறுத்தி ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடக்கும் போராட் டத்தில் பங்கேற்பது. ஆண்டு சம்பள உயர்வில் உள்ள தேக்கத்தை சரி செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்த கங்கள் வழங்க வேண்டும். தனியார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.  அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன், தணிக்கையாளர் ஜெயராணி, இணை செய லாளர்கள் ஸ்டீபன், ரவிச்சந்திரன், பிலோமினா பங்கேற்றனர். மாநிலப் பொருளாளர் பிரகாசம் நன்றி கூறினார்.