திருவள்ளூர், மே 16- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசஸ்தலை ஆற்றையொட்டி கல்மேடு கிராமம் உள்ளது. இந்த பகுதியில், தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கழிவுநீரை கொண்டு வந்து ஆற்றில் விடுகின்றனர். இதனால் ஆடு, மாடுகள் கூட மேய முடியவில்லை. இதனால் நிலத்தடி நீரும், குடிநீருக்காக அமைக் கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆற்றில் கழிவுநீர் கொட்டுவோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பெ.ரவி, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.