சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தாமங் என்ற பி.எஸ்.கோலே தலைமையிலான அரசு இன்று பதவி ஏற்றுக் கொண்டது.
சிக்கிமில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் நடைபெற்ற சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. வெற்றிபெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை சிக்கிம் மாநில முதல்வராக பி.எஸ்.கோலோ பதவியேற்றுக் கொண்டார்.