ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர், சி.பி சிங். இவர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் முன்பாக, வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது திடீரென தனது அருகில் நின்றிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரியின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, “இர்பான் பாய், ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள்; உங்களுக்கும் முன்னோர் ராமர்தான்; பாபர் அல்ல” எனக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த செயல் சற்று அதிர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினாலும், “அமைச்சர் சி.பி.சிங், நீங்கள் ராமரின் பெயரால் என்னை அச்சம் கொள்ளச் செய்கிறீர்கள்; ராமரின் பெயரைக் கெடுப்பதே உங்களைக் போன்றவர்கள்தான்” என்று காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் திலடி கொடுத்துள்ளார். மேலும்,“நாம் தற்போது பேச வேண்டியதெல்லாம், மின்சாரம், வேலைவாய்ப்பு, தண்ணீர் போன்ற அடிப்படைவசதிகள் குறித்துத்தான். அதுபற்றி நாம் பேசுவோமே” என்றும் கூறியுள்ளார்.
இர்பான் இவ்வாறு மூக்குடை கொடுத்த பிறகும், திருந்தாத பாஜக அமைச்சர் “உங்களை அச்சப்படுத்த அப்படி சொல்லவில்லை; உங்களின் முன்னோர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றுசொன்னதை நீங்கள் மறந்து விடக்கூடாது; தைமூர், பாபர், கஜினி உள்ளிட்டவர்கள் உங்களின் முன்னோர்கள் அல்ல. உங்கள் முன்னோர்கள் ராமரின் பக்தர்கள்தான்” என்று மீண்டும் மீண்டும் வம்பு இழுத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ,ஊடகங்கள் மற்றும் சமூகவலைத் தளங்களில் வெளியான நிலையில், பாஜக அமைச்சர் சி.பி. சிங்கின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி, இதேஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த மாதம், தப்ரிஸ் அன்சாரி என்ற முஸ்லிம்இளைஞர், இந்துத்துவா கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடியே, நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது பாஜக அமைச்சரே, முஸ்லிம் எம்எல்ஏ-வை ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு மிரட்டியுள்ளார்.