கொரோனாவைக் காட்டி ஊதியத்தை குறைக்க சட்டம்
ஹைதராபாத், ஜூன் 19 - கொரோனாவைக் காரணம் காட்டி, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும் என தெலுங்கானா மாநில அரசு ஏற்கென வே அறிவித்திருந்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநி லத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ‘தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை- 2020’ என்ற பெயரில் சிறப்பு அவசரச் சட்டம் ஒன்றையும் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு, மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனும் வேகவேகமாக ஒப்புதல் வழங்கிய தால், மார்ச் 24 முதல் முன்தேதியிட்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசிடம் தேவையான நிதியைக் கேட்டுப்பெற முடியாத முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, கொரோனா நெருக்கடிக்கு இடையே பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள்தான் கிடைத்தார்களா? என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.