சத்தீஸ்கரில் பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும், பேருந்து ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பிலாஸ்பூர் நெடுஞ்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் வந்த பேருந்து, இன்று காலை 8.30 மணி அளவில் ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போது எதிரிலிருந்து வந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும், பேருந்து ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைகிடமாக உள்ளது.
இந்தத் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் லாக்டவுனில் சிக்கியிருந்தனர் என்றும், இவர்கள் பெரும்பாலும் பிஹார், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.