tamilnadu

img

மோடி அரசின் கொடிய விவசாய சட்டங்களை தீயிட்டுக் கொளுத்துவோம்.... சின்னியம்பாளையம் தியாகிகள் தின கூட்டத்தில் தலைவர்கள் முழக்கம்.....

கோவை:
மோடி அரசின் வேளாண் விரோதசட்டங்களை போகியன்று தீயிட்டுகொளுத்துவோம் என சின்னியம்பாளையம் தியாகிகள் தின பொதுக் கூட்டத்தில் இரா.முத்தரசன் முழங்கினார்.

கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளியன்று கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் மேடையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஐ திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்,
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி. சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

இக்கூட்டத்தில் இரா.முத்தரசன் பேசுகையில், 2021 ஆம் ஆண்டு உலகத்தின் ஒட்டு மொத்த கவனமும்இரண்டு நாடுகள் பக்கம் திரும்பியுள்ளன. ஒன்று உலகத்தின் ஜனநாயக வல்லரசு என மற்றவர்களால் சொல்லப்படுகிற அமெரிக்காவில் நடைபெறுகிற வன்முறை.  2020 இறுதியில் துவங்கிய வன்முறை 2021லும்தொடர்கிறது. உலகத்தின் அனைத்துநாடுகளின் கண்டனத்தையும் அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது. அடுத்து இந்திய நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் போராட்டம். கடும் குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை செவிமடுக்க மறுக்கும் மோடியின் சர்வாதிகார நடவடிக்கை உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. 

ஏற்கனவே குளிரில் போராடுகிறவிவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க குளிர்ந்த நீரை பீய்ச்சியடிக்கிறது. கண்ணீர் குண்டு, தடியடி,தடுப்புகள் என அனைத்து விதமான தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனை தடைகளையும் தகர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் ஒரே கோரிக்கை விவசாயிகளுக்கு விரோதமான இந்தகொடிய சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பது மட்டும்தான். இதன்தொடர்ச்சியாக வருகிற 13 ஆம் தேதி இந்த கொடிய சட்டத்தின் நகல் களை எரிக்கும் போராட்டத்தை விவசாயிகள் கூட்டியக்கம் அறிவித்துள் ளது. தமிழகத்தில் நாம் போகிப் பண்டிகையன்று தேவையில்லாத பொருட்களை எரிப்பதோடு, இந்தசட்ட நகலையும் தீயிட்டு கொளுத்தும்போராட்டத்தை முன்னெடுப்போம். அதேபோல், குடியரசு நாளன்றுடிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. இத்தகைய போராட்டங்களை தமிழகத்திலும் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு வலுவாக முன்னெடுப்போம். 

தங்களின் அரசியல் லாபத்திற் காக மத்திய, மாநில அரசுகள் இரண்டும் மக்களை பரிதவிக்க விடுகின்றன. கொரோனா கொடிய நோய்த்தொற்றின் காலத்தில் கார்ப்பரேட் அரசுகளுக்கு சாதகமாக இந்த கொடிய சட்டங்களை மோடி அரசு
நிறைவேற்றுகிறது. பாசிசத்தையே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக.இதனை எதிர்த்து முறியடிப்பது என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டுமேநமது லட்சியமாக இருக்கட்டும். அத்தகைய வீரமிக்க போராட்டத்தை
நடத்தி வெற்றி பெறுவதே சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு நாம்செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இவ்வாறு இரா.முத்தரசன் பேசினார்.

;