tamilnadu

img

சாலையோர புதர்களை அகற்ற வலியுறுத்தல்

சாலையோர புதர்களை அகற்ற வலியுறுத்தல்

உதகை, அக்.26- தேசிய நெடுஞ்சாலை யோர புதர்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டி கள் வலியுறுத்தியுள்ளனர். கூடலூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளூர் வாகனங்கள் மற்றும் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகா அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின் றன. இச்சாலையில், கூடலூர் - நடுவட்டம் இடையே அதிக வளைவுகளை கொண்டுள் ளது. விபத்துகளை தவிர்க்க, நடுவட்டத்திலி ருந்து கீழ் நோக்கி வரும் வாகனங்களை இரண்டாவது கியரில், இயக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் விபத்துகள் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில், பருவமழையை தொடர்ந்து,  நடுவட்டம் - கூடலூர் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகள வில் புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால், இச் சாலையில வாகன விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்படும்  முன், சாலையோர புதர்களை அகற்ற வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி யுள்ளனர்.