tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பாலியல் துன்புறுத்தல்: நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் கோரிக்கை

அவிநாசி, அக்.25- அவிநாசி நகராட்சிக்குட்பட்ட, அதிமுகவை சேர்ந்த அவி நாசி நகர மன்ற உறுப்பினர் சாந்தியின் கணவர் ராஜேந்திரன்.  இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்பு றுத்தல் செய்ததாக,  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்  அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது  தொடர்பாக அவிநாசி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அவர்  கைது செய்யப்படவில்லை. சுதந்திரமாக சுற்றித் திரியும்  ராஜேந்திரனை உடனடியாக  கைது செய்து, உரிய முறையில்  விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தர வேண்டும்  என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அவிநாசி ஒன்றி யக் குழு சார்பில் அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார்  மனு அளிக்கப்பட்டுள்ளது

ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

திருப்பூர், அக்.25- தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து வியாழனன்று மாலை, பெங்களூருவுக்கு தனியார் ஆம்னி  பஸ் புறப்பட்டுச் சென்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை, ஆந் திர மாநிலம், கர்னுால் அருகே, பைக் மீது மோதிய பஸ், தீப்பி டித்து எரிந்தது. இதில் பைக்கில் சென்ற ஒருவர் மற்றும் ஆம்னி  பஸ்சில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். பஸ்ஸில் உயிரிழந்த வர்களில் ஒருவர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந் துள்ளது. திருப்பூர் பூலுவபட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜா  (63), தள்ளுவண்டியில் வெங்காயம் வியாபாரம் செய்து வருகி றார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு, இரண்டு மகன் கள். இளைய மகன் யுவன்சங்கர்ராஜ் (22). இவர் ஹைதரா பாத்தில் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். தீபா வளி பண்டிகைக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண் டிகை முடிந்தபின் விடுமுறை எடுத்துக் கொண்டு, பெற்றோரை  பார்ப்பதற்காக, தனியார் ஆம்னி பஸ்ஸில் திருப்பூருக்கு புறப் பட்டுள்ளார். இந்தப் பஸ், தீப்பிடித்து எரிந்ததில், யுவன் சங்கர் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெள்ளப் பாதிப்பு; மக்களை தங்க வைக்க 52 முகாம்கள் தயார்

திருப்பூர், அக். 25 - திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது பொது மக்களைத் தங்க வைக்க 52  நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலை யில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள், ஊரக மற்றும் நகர  சாலை திட்டப்பணிகள், வீட்டுமனைப் பட்டாக்கள்,  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும்  வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /  தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக் குநர் இல.நிர்மல்ராஜ் தலைமையில், மாவட்ட ஆட் சியர் மனிஷ் நாரணவரே முன்னிலையில், வெள்ளி யன்று ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இக்கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலு வலர் இல.நிர்மல்ராஜ் கூறியதாவது: வடகிழக்கு  பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து,  இம்மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணை,  அமராவதி அணை, உப்பாறு அணை ஆகிய  அணைகளுக்கு நீர் வரத்து, அணையின் நீர்மட்டம்,  நீர் வெளியேற்றம், அணையின் கொள்ளளவு  ஆகியவற்றைத் தொடர்ந்து தீவிரமாக கண்கா ணிக்க வேண்டும், அணையிலிருந்து உபரி  நீரை ஆறு மற்றும் கால்வாய்களில் வெளியேற்றும் போது கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச் சரிக்கை அறிவிப்பு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப் பான இடத்திற்கு செல்ல வலியுறுத்துமாறு  தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்த மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது  பொதுமக்களை தங்க வைப்பதற்கு 52 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள் ளன. நீர்நிலைப் புறம்போக்குகளான ஆறு ஏரி.  ஓடை வாரி குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைக ளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும். அந்த  நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையை  ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்ப டுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை  அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டது. நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த  முன்னெச்சரிக்கை விளம்பர பலகையை நீர்நிலை  கரைகளில் வைக்க வேண்டும். வெள்ளத் தடுப்பு  பணிக்கு போதுமான அளவு மணல் மூட்டைகளை  தேவைப்படும் இடங்களில் இருப்பு வைக்க வேண்டும்,  கிராம அளவில் முதல்நிலை தன்னார்வ லர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என இல  நிர்மல்ராஜ் கூறினார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகே யன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் க.சங்கமித்திரை, வருவாய் கோட்டாட்சி யர்கள் குமார், (உடுமலை), பெலிக்ஸ் ராஜா  (தாராபுரம்), சிவபிரகாஷ் (திருப்பூர்)  மற்றும் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் பங்கேற் றனர்.