tamilnadu

img

மோடிக்கு எதிராக மக்கள் சுனாமியாக எழுவார்கள் சீத்தாராம் யெச்சூரி பேட்டி

கோவை, ஏப்.10 – மோடிக்கு எதிராக மக்கள் சுனாமியாக எழுவார்கள் என சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோவையில் தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புதனன்று கோவை வருகை தந்தார். இதையொட்டி சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் யெச்சூரி கூறியதாவது, கடந்தஇரண்டு நாட்களாக மதுரை மற்றும்தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டி ருந்தேன். இந்த பிரச்சார களத்தில் அனுபவ அடிப்படையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று உணர்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு இடங்களிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார்.


முதல் அம்சம்

மேலும் ரபேல் விவகாரத்தில் ஊடகங்கள் வெளியிடப்பட்ட ஆவணங்கள் திருடப் பட்டவை, இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு மனுசெய்திருந்த நிலையில், மத்திய அரசின் வாதத்தை புறந்தள்ளிய உச்சநீதிமன்றம் அனைத்து ஆவணங்களையும் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என புதனன்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று நான் உச்சநீதிமன்றத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பு பற்றிபேச விரும்புகிறேன். இது முக்கியமான தீர்ப்பாகும். இப்போது வெளியாகி உள்ள அனைத்து புதிய ஆவணங்களும் மறு சீராய்வு மனுக்கான விசாரணையில் இடம்பெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு பேரிடியை மோடி தலைமையிலான அரசு எதிர்பார்த்திருக்காது. இதில் முதல் அம்சம் என்னவென்றால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது. ஏன் என்றால் அரசு உண்மைகளை உச்சநீதிமன்றத்திடம் இருந்து மறைத்தது. பல்வேறு பொய்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது.


அதில், மத்திய தணிக்கை அதிகாரி ஏற்கனவே தணிக்கை நிறைவு செய்துவிட்டதாகவும், அதனை அரசிடம் அளித்துவிட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த அறிக்கை, நாடாளுமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக்குழு அதனை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதலும் அளித்தது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். வேறு எந்த நீதிமன்ற விசாரணையும் தேவையில்லை என்றும் பொதுக்கணக்கு குழு சொன்னதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் மிகப்பெரிய பொய்யாகும். உண்மையில், உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது மத்திய தணிக்கை துறையின் அறிக்கை நிறைவாகவில்லை. மத்திய தணிக்கைத்துறையின் எந்த அறிக்கையும் தங்களுக்கு வரவில்லை என்று நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவின் தலை வர் தெரிவித்தார். இந்த நேரத்தில்தான் புதிய தகவல்களும் புதிய ஆவணங்களும் வெளிவரத் துவங்கின. இந்த நேரத்தில் அரசு வினோதமான நிலையை எடுத்தது.


இவை அனைத்தும் திருடப்பட்டவை என கூறியது. அதனால் இதனை நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தது. ஆனால், இன்றைய தீர்ப்பு இதை முழுமையாக மறுத்துள்ளது. கடந்த தீர்ப்புக்கு பிறகுவெளியாகியுள்ள புதிய ஆவணங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்போதுமுக்கியமான அம்சம் என்னவென்றால் உண்மை வெளிவர வேண்டும் என்பதுதான். இந்த விவகாரத்தில் புலனாய்வு இதழ்கள் முக்கியமான பங்கையாற்றியுள் ளன. குறிப்பாக, இந்து என்.ராம், கேரவனின்வினோத்ஜோஸ், திவயர் சித்தார்த் வரத ராஜன், வேணு ஆகியோர் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதில் தி இந்துவின் பங்கு மிகமுக்கியமானதாகும். இந்த ஆவணங்கள்தான் உச்சநீதிமன்றத் திற்கு ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தியது. அனைத்து ஆவணங்களும் மூன்று அம்சங்களை சுட்டிக்காட்டுகின்றன. இவை முக்கியமானவைகளாகும். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் இழந்துள்ளது முதல் அம்சமாகும்.


இரண்டாவது, மூன்றாவது அம்சங்கள்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் முதலில்போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 126 விமா னங்கள் வரவிருந்தன. 36 விமானங்கள் பிரான்சால் உருவாக்கப்படும். மற்ற விமானங்கள் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல்நிறுவனத்தோடு இணைந்து இந்தியா விலேயே தயாரிக்கப்படும் . தற்போது மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்திய மோடி வெறும்36 விமானங்களை மட்டும் விமானப்படைக் காக கொண்டு வருகிறார். இதனால் போர்விமானங்களுக்கான பெரும் தேவையுடன் இருக்கும் இந்திய விமானப்படை 90 விமானங்களை இழந்துள்ளது. நாடு முழுக்க சுற்றிவந்து தேசத்தின் பாதுகாப்புதான் எங்களுக்கு பிரதானமானது என மோடி கூறிவருகிறார். பாலகோட் தாக்குதலில் ரபேல்விமானங்கள் இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்று கூறினார். ஆனால், திரு மோடி அவர்களே! அந்த விமானங்கள் ஏன் நம்மிடம் இல்லை. நீங்கள் ஏன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். இதுதான் இரண்டாவது அம்சமாகும். ஏன் நீங்கள் மறு பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் என்றால் மிகப்பெரிய ஊழல்நடவடிக்கைக்காக.


 இந்த பேச்சுவார்த்தை யில் பிரதமர் அலுவலகம் நேரிடையாக ஈடு பட்டிருந்தது. முதல் ஒப்பந்தம் குறித்து அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்படித்தான் பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தங் களில் பேச்சுவார்த்தை நடைபெறும். அக்குழுவின் பரிந்துரைகள் பிரதமர் அலுவல கத்தால் நிராகரிக்கப்பட்டன. மறுபுறத்தில் அதேவேளையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனையின்படி பேச்சுவார்த்தை நடத்தினார். முதல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரானஅம்சம் இடம்பெற்றிருந்தது. அது நீக்கப் பட்டது. இது முதலாவது அம்சமாகும். இரண்டாவது அம்சம் என்னவென்றால் பிரான்ஸ் அரசு கொடுக்க வேண்டிய உறுதி மொழி புதிய ஒப்பந்தத்தில் இல்லை. மூன்றாவது அம்சம் வங்கி தரவேண்டிய உறுதிமொழியும் புதிய ஒப்பந்தத்தில் இல்லை. விமானங்களை ஒப்படைத்தபிறகு பணத்தை தருவது என்பது கூட அதில் இடம்பெறவில்லை. ஊழல் என்பதால்தான் இப்படிப்பட்ட புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 


ஊழலின் வேர்

மேலும் முதல் ஒப்பந்தத்தில் இருந்த பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து உற்பத்தி செய்யும்பொறுப்பு அனில் அம்பானியின் நிறுவன த்திற்கு மாற்றப்படுகிறது. இத்தனைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அனில் அம்பானி நிறுவனம் துவங்கப்பட்டது. எஞ்சிய 90 விமானங்களை பிரான்சு நிறு வனத்துடன் இணைந்து எச்ஏஎல்தான் உற்பத்தி செய்வதாக இருந்தது. அது இந்தியாவிற்கு தொழில்நுட்பத்தை மாற்றித்தரு வதாக அமைந்திருக்கும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும். ஆனால்அந்த குறிப்பிட்ட கார்ப்பரேட் பெருமுத லாளியின் லாபத்திற்காக இந்த புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. போபோர்ஸ் ஊழலில் கிடைத்தது போன்று பணப்பரிமாற்ற தகவல்கள் இதில் இல்லை என்று மோடி யின் நிதிஅமைச்சர் கூறியுள்ளார். பணப்பரிமாற்ற தகவல்களை பெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசின் நிதிகுறித்த சட்டவிதிகளை இவர்கள் மாற்றிவிட்டார்கள். அதை நிதி மசோதாவில் வைத்து கடத்திக்கொண்டு வந்துள்ளார்கள். இதன்மூலம் தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்துள்ளார்கள்.


இதனை யார் வெளியிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதனை யார் வாங்குகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. கொள்ளை யடிக்கப்பட்ட அனைத்து நிதியும் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கொண்டு வந்துவிட முடியும். முதல் கட்டத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 94.5சதவீதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப் பட்டுள்ளது. இதுதான் ஊழலின் வேராகும்.அரசியல் கட்சியானது இந்த பத்திரத்தை வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ள முடியும். இது சட்டப்பூர்வமானதாக ஆக்கப் பட்டுவிட்டது. இதில் எந்தவித சட்டவிரோத மும் இல்லை. அரசியல் ஊழல் என்பது இந்த வகையில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்றவுடன் மோடி பதற்ற மடைந்தார். இவை அனைத்தும் அந்த விசாரணையில் வெளியில் வந்துவிடும்என்பதே அவர்களின் அச்சம். பேச்சு வார்த்தை குழுவின் கருத்துக்கள் எப்படி புறந்தள்ளப்பட்டன. அவர்களின் மாற்றுக் கருத்துக்கள் பிரதமர் அலுவலகத்தால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டன. பொதுவாக இவை அனைத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் செய்யப்படும். அவற்றை எப்படி பிரதமர் அலுவலகம் செய்தது. நேரிடையாக பிரதமர் அலுவலகம் எப்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.


பேச்சுவார்த்தைக்குழுவின் எதிர் கருத்துகள் அனைத்தும் ஆவணங்களாக உள்ளன. இந்த ஆவணங்கள்தான் திருடப்பட்டு விட்டன என்று அரசு சொல்கிறது. நான் ஒருகேள்வியை மோடியிடம் கேட்க விரும்பு கிறேன். பாதுகாப்புத்துறையை சேர்ந்த ஒரு ரகசிய ஆவணத்தையே உங்களால் பாது காக்க முடியாது என்றால் தேசத்தை எப்படிநீங்கள் பாதுகாப்பீர்கள். மக்களவை தேர்த லுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (11.4.19) நடைபெற உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இது மோடியின் தலைமைக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் இது எதிரொலிக்கும். மோடிக்கு எதிராக மக்கள் சுனாமியாக எழுவார்கள். மேலும், நாட்டின் நலன் கருதி, விமானப்படையின் நலன் கருதி எந்தவித தாமதமும் இல்லாமல் இந்த வழக்கு முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும். ரபேல் விவகாரத்தை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் விரைவான விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பினை விரைந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சிபிஎம் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், கோவை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


;