tamilnadu

img

கோவையில் செம்படை பேரணி

கோவையில் உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்கவும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவும், ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் திங்களன்று கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரம் மலையாள சமாஜ் அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். இதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, சிவானந்தா காலனியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற செம்படை பேரணி நடைபெற்றது.