tamilnadu

img

மழையால் பில்லூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

மழையால் பில்லூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம், ஜூன் 17- தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து காலையில் 8 ஆயி ரம் கன அடியாக இருந்த நிலையில் மதியம்  16 ஆயிரம் கன அடி என இரு மடங்காக உயர்ந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு  பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளம் மலை  பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த  கனமழை காரணமாக திங்களன்று அதி காலை நான்கு மணியளவில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இத னால் அணையின் பாதுகாப்பு கருதி அதன்  மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில்  97 அடியாக நீர்மட்டத்தை நிலை நிறுத்தி  அதன் உபரி நீர் வினாடிக்கு 14 ஆயிரம் கன  அடி பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. அணைக்கான நீர்வரத்து அப்படியே பவானி யாற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றங் கரையோர மக்களுக்கு திங்களன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று காலை அணைக்கான நீர்வரத்து குறைந்து வினா டிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்தது.  இதனால் காலை முதல் அணையில் இருந்து 8  ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே உபரி  நீராக வெளியேற்றப்பட்ட நிலையில் திடீ ரென மதியம் அணைக்கான நீர்வரத்து இரண்டு மடங்காக உயர்ந்து, வினாடிக்கு 16  ஆயிரமாக அதிகரித்தது. அணைக்கான நீர் வரத்து அப்படியே உபரி நீராக பவானி யாற்றில் வெளியேற்றப்பட்டு வரும் நிலை யில் தற்போது நீர் வெளியேற்றம் 16 ஆயி ரமாக அதிகரித்துள்ளதால் பவானி ஆறு கரை புரண்டு ஓடி வருகிறது. அணை இரண்டாம் நாளாக நிரம்பி வழி வதாலும் அணைக்கான நீர்வரத்து அப் படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்படுவதாலும் கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி  மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக் கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர் கிறது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம்  ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து நீர்திறப்பு

காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து நீர்திறப்பு ஈரோடு, ஜூன் 17- காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் ஆகி யோர் திறந்து வைத்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் இருப்பு,  பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடி நீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு காலிங்கரா யன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட் டது. இதன் மூலம் எதிர்வரும் 13.10.2025 வரை 120 நாட்க ளுக்கு பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி  ஆகிய வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறும் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 18.24 டி.எம்.சி, நீர்  வரத்து விநாடிக்கு 5962 கனஅடி, அரக்கன்கோட்டை தடப் பள்ளி வாய்க்காலின் வெளியேற்றப்படும் நீரின் அளவு 750  கன அடியாக உள்ளது. காலிங்கராயன் கால்வாயில் வெளி யேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடியாக உள்ளது.  எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்ப டுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அணை திறப்பு நிகழ்வில், தலைமை பொறியா ளர் (கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்பு பொறியா ளர் (எல்.பி.பி வடிநிலவட்டம்) ஜே.கோபி, செயற்பொறியா ளர் (கீழ்பவானி வடிநிலகோட்டம்) திருமூர்த்தி, உதவி செயற் பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் சபரிநா தன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.