tamilnadu

img

பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதி

பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதி

தருமபுரி, ஜூன் 18- நல்லம்பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல்  செல்வதால், பயணிகள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள் ளியை அடுத்த பாளையம்புதூர் நால் ரோடு பேருந்து நிறுத்தம் சேலம் -  பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிறுத்தத்தை தண்டுகாரம்பட்டி, பாளையம்புதூர், கோப்பை, சுப்புசெட்டிநகர், சாமியார் வீட்டு கொட்டாய், பச்சைவீட்டுகொட் டாய் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப் பகுதியைச் சேர்ந்த வேலைக்கு செல் லும் பெண்கள், கல்லூரி மாணவர்கள், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்க ளுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லக்கூடியவர்கள் காலையிலும், மாலையிலும் பாளையம் புதூர் நால்  ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பேருந்தில் செல்வது வழக்கம். இந்நி லையில், அவ்வழியாக வரும் தனியார் பேருந்துகள், நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல  முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகாரளித்தும், தனி யார் பேருந்துகளை சிறைபிடித்தும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பாளை யம்புதூர் நால் ரோடு பகுதியில் அரசு பேருந்து மற்றும் குறிப்பாக தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தனியார் பேருந்துகள் பாளையம்புதூர் வருவதற்காக சேலத் தில் ஏறும்பொழுது, அவர்களை பேருந் தில் ஏற்ற மறுக்கின்றனர். அதை மீறி நாம் ஏறினால் பாளையம் புதூரில் நிற்காமல் நல்லம்பள்ளியில் இறக்கி விடுகின்ற னர். இரவு நேரங்களில் இதுபோன்று நடைபெறுவதால் திரும்ப வீட்டிற்கு வரு வதற்கு கூட பேருந்து இல்லாமல் மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பாளையம் புதூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் தனியார் பேருந்து கள் மீது நடவடிக்கை எடுத்து, பேருந்து கள் நின்று செல்லவதை உறுதிப்படுத்த வேண்டும், என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர்.