tamilnadu

img

அமராவதி ஆற்றில் பறிபோகும் உயிர்கள்: பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு சிபிஎம் கோரிக்கை

அமராவதி ஆற்றில் பறிபோகும் உயிர்கள்: பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், அக். 27 - தாராபுரம் அமராவதி ஆற்றில் உள்ள  புதைமணலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். எனவே இப்பிரச்சனை யில் வருவாய்த் துறை நிர்வாகம் மௌன மாக இருப்பது சரியல்ல, உயிரிழப்பு விபத் துகள் ஏற்படாமல் தடுக்க அமராவதி ஆற்றுப்  பகுதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ்,  தாராபுரம் தாலுகா கமிட்டி ஒருங்கிணைப்பா ளர் என்.வெங்கட்டராமன் உள்ளிட்டோர் திங் களன்று தாராபுரம் வருவாய் கோட்டாட்சி யரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது: தாரா புரம் நகரை ஒட்டி செல்லக்கூடிய அமரா வதி ஆற்றில் புதைமணல் உள்ளது. இதில்  இளைஞர்கள் இதுவரை 60க்கும் மேற்பட் டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதற்குண் டான எச்சரிக்கை பலகை வைத்தாலும் அது  காணாமல் போய் சிதிலமடைந்து வருகி றது. இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டாலும் இது  தொடர்பாக அரசு நிர்வாகம் எந்த நடவ டிக்கையும் மேற்கொள்ளாமல், நிரந்தரமாக பிரச்சனை தீருமளவுக்கு நடவடிக்கை எடுப்ப தில்லை. எத்தனை உயிர் போனாலும் மௌன மாக இருப்பது சரியல்ல. எனவே மாவட்ட  நிர்வாகம் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு  காண வேண்டும்.குறிப்பாக, புதைமணல் இருக்கக்கூடிய பகுதிகளில் அவற்றை அப்பு றப்படுத்தி அங்கு கற்கள், காங்கிரீட் தளம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.  இதற்காக அமைதி வழியான போராட்டத்தை  மேற்கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மனுவைப் பெற்று பிரச்சனை குறித்து கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தார்.