tamilnadu

img

மாட்டு இறைச்சி விற்க தடையா ? - அவிநாசி வட்டாட்சியர் சுப்பிரமணியம்

அவிநாசி அருகே கானாங் குளத்தில் சனியன்று இரவு மாட்டு இறைச்சி விற்க வட்டாட்சியர் தடை விதிக்க முற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களான  உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்  மாட்டுக்கறி விற்பதற்கும், உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் மாட்டிறைச்சி விற்பதற்கு தடையில்லை. ஆனால் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் கானாங்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வேலுச்சாமி என்பவர் பல வருடங்களாக மாட்டு இறைச்சி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திடீரென்று வேலுச்சாமியின் மாட்டு இறைச்சி கடைக்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் சுப்பிரமணியம், மாட்டு இறைச்சி விற்க கூடாது என்று கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ளவர்கள் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைக் கண்ட பல்வேறு பெரியார் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;