tamilnadu

img

குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.28- பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை உட னடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகராட்சி பகுதிகளான கவுண்டம்பாளையம் முதல் இடையர்பாளையம், ஜி.என்.மில்ஸ் மற்றும் சுப்பிர மணி பாளையம், துடியலூரி, கணுவாய் ஆகிய பகுதிகளில்  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடி யாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து சாலை அமைத்து  தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாக  மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக்குழு சார்பில் துடியலூர் பேருந்து நிலை யம் அருகே செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ந.ராஜா தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்குமார், ஒன்றியச் செய லாளர் கோகுலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்  மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.