tamilnadu

img

பூந்தோட்டத்தையே காதில் சுற்றும் கோவை மாநகராட்சி

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சரின் அண்ணன்

கோயம்புத்தூர், நவ.29- ‘விசுவாசம்’ காட்டுவதில் தங்களை மிஞ்ச யாருமே இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, அமைச்சருக்கு சலாம் போடும் நிலையை தாண்டி அமைச்சரின் உறவுகளுக்கும் சலாம் போட்டு தற்போது திருதிருவென விழித்துக் கொண்டிருக்கின்றனர் கோவை மாநகராட்சி அதிகாரிகள். நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரை ரூ.1,100 கோடியில் ஸ்மார்ட் சிட்டி  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளி ட்ட சின்ன, சின்ன திட்டங்களை தயா ரித்து அதனை முடித்து நாங்கள்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலேயே அதிக  மதிப்பெண் பெற்றவர்கள் என மார்தட்டிக்கொள்கிறது கோவை மாநகராட்சி. மறுபுறம் அனைத்து ஒப் பந்தங்களுமே அமைச்சரின் உற வினர்களுக்கு மட்டுமே தருகின்றனர் என இதர ஒப்பந்ததாரர்கள் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத் தில் வழக்கு நிலுவையில் இருக் கிறது. இதனை மறுத்த அமைச்சர் வேலு மணி ஒப்பந்தங்கள் முறைப்படி தான் நடைபெற்றுள்ளது; காழ்ப்புண ர்ச்சியின் காரணமாக எங்கள் மீது  குற்றம்சாட்டுகின்றனர் என போகு மிடமெல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தற்போது, உக்கடம் வாலாங்குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை, மாநகராட்சி அதிகாரி களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியின் அண்ணன் எஸ்.பி.அன்பர சன் ஆய்வு செய்த சம்பவம் சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.  இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகமே செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது. இதில், ‘ஸ்மார்ட் சிட்டி பணிகளை, கமிஷனர் ஷ்ரவன் குமார், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது

``அன்பரசன் மாநகராட்சி நிர்வாகியும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி நிர்வாகியும் இல்லை. பிறகு  எந்த அடிப்படையில் அவர் அதிகாரி களுடன் ஆய்வு செய்கிறார்?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை நாடாளு மன்ற உறுப்பினராக உள்ள பி.ஆர்.நடராஜனுக்கு, ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆய்வு கூட்டங்களுக்கு அழைப்பு கூட கொடுப்பதில்லை. ஒரே நேரத்தில் இத்தனை வேலைகளையும் செய்து நகரத்தை போக்குவரத்து நெரிசலில் சிக்குகிறதே என்று எம்.பி., அதிகாரி களிடம் கேள்வி கேட்டால் அதற்கு மௌனம்தான் பதிலாக வருகிறது. இதேபோல் வாரம் தவறாமல் திமுக வின் நா.கார்த்திக் எம்எல்ஏ மனுக் களாக கொண்டு போய் கொடுத்தா லும், அதனை ஏறெடுத்தும் பார்க்க மறுக் கிறார்கள் அதிகாரிகள்.  இச்சூழலில் தான் ‘சமூக ஆர்வலர்’ என்ற போர்வை யில் அமைச்சரின் அண்ணன் அன்பர சன், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்தது உண்மையான சமூக ஆர்வலர்களை கொதிப்படைய செய்துள்ளது. அரசு நிர்வாகத்தில் அன்பரசனின் தலையீடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்திக் குறிப்பு அமைந்திருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பிக்கப் பட்ட உடனேயே, அ.தி.மு.க முன்னாள்  எம்.எல்.ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா கோவை ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக எழுந்தபோது சுகன்யா அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில்தான் அமைச்சரின் அண்ணன் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டதும், அதனை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்தே அதி காரப்பூர்வமாக செய்திக்குறிப்பும் அனுப்பியுள்ளதும் நடந்துள்ளது. ஆனால், அண்ணன் அன்பரசன் அந்த  வழியாக சென்றார். எங்களை பார்த்து  வணக்கம் போட வந்தார் என பூந்தோட்டத்தையே காதில் சுற்றுகின்ற னர் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.  இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், ``மாநகராட்சி அதிகாரி கள் மட்டும்தான் ஸ்மார்ட் சிட்டி பணிக் காகச் சென்றிருந்தோம். அன்பரசன்,  அருகில் இருந்த சிறுதுளி தன்னார்வ அமைப்பின் அலுவலகத்துக்கு வந்திருந்தார். வரும் வழியில் எதேச்சையாக சந்தித்தோம். `நல்லா இருக்கீங்களா’ என்று என்னிடம் கேட்டார். வேறு எதுவும் அவர் பேச வில்லை. அவருக்கும் இந்த ஆய்வுக்கும் சம்பந்தமே இல்லை. இதை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையினர் போட்டோ எடுத்ததுடன், அதை ஊடகங்களுக்குச் செய்திக் குறிப்பாகவும் வெளியிட்டுள்ளனர். இது பி.ஆர்.ஓ செய்த தவறு. அவரை நான் கண்டித்துள்ளேன்” என்றார்.

இதுகுறித்து எஸ்.பி.அன்பரசனி டம் பேசியபோது, ``சாலை பிரச்சனை சம்பந்தமாக சிறுதுளி அமைப்பினர் என்னிடம் சொல்லியிருந்தனர். அதற்காக, சிறுதுளி அலுவல கத்துக்குச் சென்றிருந்தேன். மாநக ராட்சி அதிகாரிகள் அருகில் ஆய்வு  செய்து கொண்டிருந்தனர். அப்போது,  அந்த வழியாகச் செல்லும்போது அவர் களைச் சந்தித்தேன். அவ்வளவுதான். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தவறாக செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். நான் இதற்கு முன்பும் அரசுப் பணிகளை ஆய்வு செய்தது இல்லை. அரசுப் பணிகளில் தலையிடுவதுமில்லை” என்றார்.  தங்களின் தவறை மறைப்பதற்கு மக்கள் தொடர்பு அதிகாரியை பலிகடாவாக்க ஆளும் கட்சியினரும், அரசு உயர் அதிகாரிகளும் முயற்சிக்கிறார்கள் என்ற சலசலப்பு ஒரு தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் தற்போது எழ துவங்கியுள்ளது. 

 அ.ர.பாபு
 

;