tamilnadu

img

கோவை:ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும்  ஒரு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடி பணம் இழக்கும் சூழலில் இளைஞர்கள் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். 
இந்நிலையில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (28). இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெருமளவு பணத்தை இழந்தவர் பின்னாட்களில் கடன் வாங்கி விளையாடி உள்ளார். இதனால் அதிக பணம் இழந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் இருந்த மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.