tamilnadu

img

கோவை: குடிதண்ணீர் தேடி அலையும் குரங்கு!

கோவை கோட்டைமேடு பகுதியில் புகுந்த குரங்கு ஒன்று, குடிதண்ணீர் தேடி அலையும் காட்சி வைரலாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி, கோவை சுற்று வட்டாரப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராம பகுதிகளுக்குள் வன உயிரினங்கள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி  வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கோவை மாநகர பகுதியான கோட்டைமேடு பகுதிக்குள் புகுந்த குரங்கு ஒன்று வின்சென்ட் சாலை, சாமியார் புதுவீதி ஆகிய பகுதியில் தண்ணீர் தேடி அலைகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே ஒரு குளிர்பான காலி பாட்டிலை எடுத்து ஏக்கத்துடன் தண்ணீர் இருக்கின்றதா? என பரிதாபமாக பார்க்கிறது.

இதனை அப்பகுதியில் இருந்த சிலர் தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.  வனவிலங்குகளின் உணவு, தண்ணீர் தாகத்தை தீர்க்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், ஒரு சில வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதுபோன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வரும்பொழுது அதனை பொதுமக்கள் தாக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.