கோவை மாவட்ட நரசிம்ம நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விஷ்வ ஹிந்து அமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவர். இவர் கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நோட்டீஸ் அடித்து கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
அப்போது அடிக்கப்பட்ட பத்திரிக்கையில் சில நிர்வாகிகளின் பெயர் அச்சடிக்கபடாததால் ராம கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்குச் சென்ற பிற நிர்வாகிகள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் ராமகிருஷ்ணனின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இந்த காட்சிகள் ராமகிருஷ்ணன் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ராம கிருஷ்ணன் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விஷ்வ ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மோகன், சரவணன், செல்வம். செந்தில், குணசேகரன் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.