துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் இருந்து 435.5 கிராம் கலவை தங்கத்தை கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திங்களன்று பயணிகளை பரிசோதனை செய்ததில் உடலில் மறைத்து இரண்டு காப்ஸ்யூல் வடிவ பாக்கெட்டுகளில் வைத்திருந்த கலவை தங்கத்தை கைப்பற்றினோம். இண்டீஜியோ விமானம் 6E89 மூலம் துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சிபிடி காலிகட் குழு ஆய்வு செய்ததில் 435.5 கிராம் கலவை தங்கம் இருந்துள்ளது. உடனடியாக இதனை பறிமுதல் செய்துள்ளனர் என சுங்க ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.