tamilnadu

img

சிட்டாய் பறக்கும் சிறுவன்! -சி.ஸ்ரீராமுலு

தடகள விளையாட்டு உலகில் ஓட்டப் பந்தயத்தில் மின்னல் வேகத்திற்கு அடைமொழி கொடுத்தவர் உசைன் போல்ட். ஒன்பது முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை  வென்று அசத்தியவர். கண்ணுக்கே தெரியாத சின்னஞ்சிறு குட்டி நாடான ஜமைக்காவில் பிறந்த இவர், உலகின் மிக தலைச் சிறந்த தடகள வீரர் விருதை ஒன்றல்ல இரண்டல்ல ஆறுமுறை  தக்க வைத்துக் கொண்டவர். இவரது அசுர வேகத்தை முறியடிக்க இனி ஒருவர் உலகில் பிறக்க முடியுமா? என்று கேள்விகள் எழுந்தன. அன்றைக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுது முடியும் என சொல்ல வைத்திருக்கிறார் 7 வயது சிறுவன். கால்களில் றெக்கை கட்டி பறக்கும் அந்தச் சிறுவ னின் பெயர் பிளேஸ். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் டம்பாவில் பிறந்தவன்.

வல்லவனுக்கு புல்லும்...

சிறுவன் ருடோல்ப் பிளேஸ் இன்கிராம், தன்னோடு விளையாடும் சிறுவர்கள் போல் குறும்புத் தனமும், குழந்தை தனமும் கொண் டவன்தான். இருந்தாலும் மற்றவர்களைக் காட்டிலும் சாதனை படைப்பதில் தனக்கு தானே வல்லவன் என்பதை நிரூபித்து வருகிறான். 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் உசேன் போல்ட்.  அப்போது அவருக்கு  வயது 23. அவரது சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுவன் பிளேஸ் கடந்த மார்ச் மாதம்  அமெரிக்காவில் நடந்த சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அவன் ஓடியதை பார்க்கும் பொழுது பிரமிப்பை ஏற்படுத்தியது. விசில் சத்தம் கேட்ட அடுத்த வினாடியே சிட்டாய் பறந்த அவன், தன்னோடு போட்டியிட்ட 7 பேரையும் கொஞ்ச மும் நெருங்கவே விடாமல் பந்தய தூரத்தை 13.48 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றான். அவனது ஓட்டமும், வேகமும் பலரது புருவத்தை உயர்த்தியதுடன்  இவன் தான் மிக வேகமான ஓட்டக்காரர் என புகழ வைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவனது தந்தை, “இவன் வளர,வளர  வேகத்தை மேலும் அதிகரிப்பான். அவனது துடிப்பும் துள்ளலும் நிச்சயம் ஒருநாள் உசைன் போல்டின் உலக சாதனையை முறியடிக்கும். ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்லாமல், முரட்டுத்தனமாக விளையாடப்படும் ரக்பி போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவன்” என கூறியிருக்கிறார்.

சின்ன சின்ன ஆசை...
தடகள போட்டியில் மட்டுமல்லாமல், கால்பந்து விளையாட்டிலும் கலக்கும் இச்சிறுவன் தேசிய கால்பந்து லீக்கில் விளையாட வேண்டும் என்பதும் லட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது. தனது ஆட்டத்தின் மூலம் பார்வையாளர்களை மட்டுமல்ல கால்பந்து வீரர்களின் மனதையும் கவர்ந்துள்ளான். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் சிறந்த விருதுகளில் ஒன்றான “ஹோய்ஸ் மேன் டிராபி” யைப் பெற்று பலரது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறான். 

பரபரப்புக்கு பஞ்சமில்லை...

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இவனது உடற்பயிற்சி வீடியோக்கள் இளம் தலைமுறையை வெகுவாக கவர்ந்து வருகிறது. விளையாட்டு வீரராக மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் பரபரப்பான நபர்களில் ஒருவராகவும் மாறிவிட்டான். தந்தையால் பராமரிக்கப்பட்டு வரும் அச்சிறுவனின் இன்ஸ்டா கிராம் கணக்கில்  இது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து உள்ளதால் பலருக்கும் சவால் விடுத்துள்ளான்.

விளையாட்டல்ல ‘நிஜம்’...

நான்கு வயதிலிருந்து ஓடத் துவங்கியிருக்கும் பிளேஸ், தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டியை பார்த்து நானும் அதில் விளையாடுவேன் என்று சொல்லியிருக்கிறான். இதை விளையாட்டாக கூறுவதாகதான் பெற்றோர் நினைத்திருக்கிறார்கள். ஆனால், சிறு வயதிலேயே விளையாட் டுத் துறையில் கால்பதித்து முதலிடம் பிடித்து பதக்கங் கள் குவித்து வருவதால் தனக்குப் போட்டியாக தன்னை மட்டுமே நம்பி போடுகிறான். டென்னிஸ் உலகின் முடிசூடா ராணி வில்லியம்ஸ் சகோதரிகள், கால்பந்து நட்சத்திரம் பிரேசிலின் கிறிஸ்டினோ ரொனால்டினோ, கிரிக் கெட் வீரர் ஜிம்பாப்வேயின் ஹென்றி ஒலாங்கா ஆகி யோரைப் போன்று  நீண்ட சடை கைகளுடன் காட்சி அளிக்கும் இந்த சிறுவன் கடந்த ஆண்டு 14.49 வினாடியில் கடந்த 100 மீட்டர் தூரத்தை இந்த முறை ஒரு நிமிடத்தை குறைத்திருக்கிறான். இதேபோன்று வேகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் உசேன் போல்ட் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம் பிடித்து தான் எனது முதல் கடமை, லட்சியம் கூறியிருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அச்சிறுவனின் மகத்தான கனவு நிறை வேறட்டும்.