tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உதவிக்கரம்

பொள்ளாச்சி, செப்.24- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொள் ளாச்சி சர்கார்பதி பழங்குடியின மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உபகரணங் கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி மலைக் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பவர்ஹவுஸ் பகுதி குடியிருப் புகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந் நிலையில் சர்கார்பதி பழங்குடியின மலை வாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய உபகரணமான அரிவாள் வழங்குமாறு கோரியிருந்தனர்.  இதையடுத்து ‘உதவும் இதயங்கள் ‘எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிறன்று முதற்கட்டமாக 30 பேருக்கு  அரிவாள் வழங்கப்பட்டது. இதேபோல் மலைவாழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தமிழக அரசும், வனத் துறையும் போதிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.