கோவை, பிப். 26- காதலிக்க பெண் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலி பர் பெண்ணின் அறுத்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் பத்ரா(21). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரு கிறார். இவரும் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்க ருப்பன் என்கிற ரஞ்சித் ஆகிய இருவரும் பழகி வந்த நிலையில் ரஞ்சித்திடம் பேசுவதை பத்ரா தவிர்த்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் ஞாயிறன்று பத்ராவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பத்ராவை தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த பிளேடால் பவித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பத்ராவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.