அன்னூர், மார்ச் 10 - அன்னூர் அருகே கூத்தாண்டவர் கோவில் வீதியில் ஞாயிறன்று மகளிர் தினம் கொண்டாட்டப் பட்டது. மார்ச் 8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினர். இதன் ஒருபகுதியாக அன்னூர் கூத்தாண்டவர் கோவில் வீதியில் ஞாயிறன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மகளிர் தினத்தன்று கேக் வெட்டி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.