tamilnadu

சமையல் செய்கையில் தீப்பிடித்து பெண் பலி

கோவை, செப்.19- குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ், கீதா தம்ப தியினர் கோவையில் தங்கி பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி யன்று கீதா சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக அவரது உடையில் தீ பற்றியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவம னையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந் தார். இருப்பினும் அவரின் உடல் நிலையில் முன்னேற் றம் இல்லாததால், வியாழ னன்று கோவை அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக கொண்டு செல்லப்பட் டார்.

அங்கு கீதாவை பரி சோதனை செய்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.