tamilnadu

img

உரிமை பறிப்பு மசோதாக்களை திரும்பப் பெறுக

தருமபுரி, ஆக.6- மத்திய அரசின் உரிமை பறிப்பு மசோதாக்களை திரும்பப் பெற வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இரண்டாவது முறையாக பதவி யேற்ற மோடி தலைமையிலான பாஜக அரசு மக்கள் விரோத பல்வேறு  சட்டத் திருத்தங்களை நிறைவேற்றி  வருகிறது. குறிப்பாக தேசிய புல னாய்வு சட்டம், முத்தலாக் சட்டம்,  தகவல் உரிமை அறியும் சட்டம், தேசிய மருத்துவ கவுன்சில் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கை வரைவு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு ரத்து ஆகியவற்றை  நாடாளுமன் றத்தில் அவசர அவசரமாக நிறை வேற்றி வருகிறது. மேலும் 17ஆவது நாடாளுமன்ற அமைக்கப்பட்டபின் இதுவரை நாடாளுமன்ற உறுப் பினர்களைக்கொண்ட நிலைக் குழுவோ, தேர்வுக்குழுவோ அமைக் கப்படாமல், மேற்படி சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது.  இந்த ஜனநாயக விரோத மத்திய  அரசை கண்டித்தும், நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் கே.தங்கராசு தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, ஆர்.சிசு பாலன், ஒன்றியச் செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா, பாப்பிரெட்பட்டி சி.வஞ்சி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.வி.மாது, டி.சேகர் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதேபோல், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், சோலை அர்ஜுனன், வி. விஸ்வநாதன், மாவட்ட குழு உறுப் பினர்கள் பி.எம்.முருகேசன் வி. ரவி, எம்.சிவா உள்ளிட்டோர் கண்டன  உரையாற்றினர். இதில் பென்னா கரம் நகர செயலாளர் எஸ்.வெள்ளி யங்கிரி, பகுதிக்குழு செயலாளர்  கே.அன்பு, சின்னம் பள்ளி பகுதிச்  செயலாளர் ஜி.சக்திவேல், பாப்பாரப் பட்டி பகுதி செயலாளர் ஆர்.சின்ன சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜி.சிவன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

சேலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சேதுமாதவன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் கண்டன உரையாற்றினார். மாவட்ட  செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.உதய குமார், எம்.குணசேகரன், ஏ.முரு கேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும்  இடைக் கமிட்டி செயலாளர் கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். வாழப்பாடி தாலுகா குழு சார்பில்  தாலுகா குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.குழந்தைவேல் கண்டன உரையாற்றினார். இதில் தாலுகா செய லாளர் வி.பழனிமுத்து,  நகர செயலா ளர் தங்கவேல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல் 

எலச்சிபாளையம் பேருந்து நிறுத் தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், வாலி பர் சங்க செயற்குழு உறுப்பினர் பி.ஜெயந்தி மற்றும் பி.கிட்டுசாமி, பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பள்ளிபாளையம் பேருந்து நிறுத் தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.மோகன், இ.கோவிந்த ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார், அசன், சம்பூரணம் உள்ளிட் டோர்  கலந்து கொண்டனர்.  பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமை வகித் தார். இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடாசலம், சிமெண்ட் பேக்டரி செயலாளர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, நகரக் குழு உறுப்பி னர்கள் சக்திவேல், பாலுசாமி, காளி யப்பன், மோகன் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.  ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு  பிரதேசக்குழு செய லாளர் ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மூத்த தலைவர் ராஜ கோபால், நகரச் செயலாளர் சண்முகம்,  கிளை செயலாளர் விவேகானந்தன், மாதேஸ்வரன், பழனிசாமி, சுப்பிர மணி தொழிற்சங்க தலைவர்  பழனி வேல் உட்பட பலர் கலந்து கொண் டனர். நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பிரதேச செயலாளர் பி.ஜெயமணி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராம சாமி, கு.சிவராஜ் மற்றும் சதாசிவம், மு.து.செல்வராஜ், பி.பெருமாள்,  சி.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.வேலாயுதம் தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர் ஐ. ராயப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதிநாராயணன் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

;