tamilnadu

img

பொள்ளாச்சி அருகே காட்டு யானை அட்டகாசம்

பொள்ளாச்சி, ஆக.8 - பொள்ளாச்சி அடுத்த சேத்துமடையில் தனியார் தோட் டத்தில் புகுந்த காட்டு யானை அங்குள்ள தென்னை மரங்களை சூறையாடியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டியடித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட சேத்துமடை சோதனைச் சாவடியில் உள்ள பகுதியில் கனிமொழி என்பவரது தென்னை தோட்டத்தில் புதனன்று இரவு காட்டு யானை புகுந்தது. பின்னர் தோட்டத்திலிருந்த தென்னை  குறுத்துகளை பிடுங்கி சேதப்படுத்தியது. இதனையடுத்து  வனத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனத்திற்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.