tamilnadu

img

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்ட வாக்காளர்கள்

அவிநாசி, டிச. 30- அவிநாசி அருகே பெரியாயி பாளையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்டு வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியத்தில் 14,350 வாக்காளர்கள் கொண்ட பழங் கரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அதிமுகவின் அதி காரப்பூர்வ வேட்பாளர் சுரேகா, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தங்கை கோமதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலையரசி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோகிலா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வூ ராட்சிக்குட்பட்ட  பெரியயிபாளை யத்தில் முன்னாள் ஊராட்சி மன் றத் தலைவர் செந்தில் வாக்குச் சாவடி முன்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் பத்தாண்டுக ளாக அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கவில்லை, தற்போது எதற்கு வந்தீர்கள், நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற னர். 

அப்போது அங்கு வந்த அதிமுக வேட்பாளர் சுரேகாவின் கணவர் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் கடிதத்தின் மூலமாக உங்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என எழுதி கொடுக்கிறோம் என்று பொதுமக் களை சமாதானம்  செய்ய முயற்சித் தார். இதனை அப்பகுதியினர் ஏற்காத நிலையில், இருதரப்பி னருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆவேசமடைந்த வாக்காளர் கள் சாலை மறியல் செய்ய  முயற்சி செய்தனர். இதைய டுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட் டத்தைக் கலைத்தனர்.

வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகம்

அவிநாசி அருகே வடுகபாளையம் வாக்குச் சாவடியில்  வாக்களித்து கைப்பேசியில் புகைப்படம் எடுத்து வந்தவர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம் செய்தனர். இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் திங்களன்று (டிச.30) நடைபெற்றது. வடுகபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் என்.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் சுயேட்சையாக ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் என்.சுப்பிரமணியம் ஆட்டோ சின்னத்தில் வாக்குச்சாவடியில் முத்திரையிட்டு கைப்பேசி யில் புகைப்படம் எடுத்து வரும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தார்.  இதனையறிந்த வடுகபாளையம் வாக்குச்சாவடியில் முகவர்களாக இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் பழனிசாமி அப்பகுதி தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். பின்னர் வாக்குச்சாவடிக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
 

;