tamilnadu

img

குளத்தை ஆக்கிரமித்து பன்றி குடில் ஊராட்சி மன்றத் தலைவரின் அத்துமீறல்

அவிநாசி, ஜன. 10- அவிநாசி அருகே கரு வலூரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற தலை வர் பன்றி குடில் அமைத் துள்ளார். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சி யில் பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இந்நிலையில் கருவலூர் ஊராட்சி மன்றத் தலைவரான மாரிமுத்து  பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கருவலூர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து பன்றிக்கு குடில் அமைத்து உள்ளார்.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏற்று 4 நாட்கள் நிறைவடையாத நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந் தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். பன்றிக் குடில் அமைப்பதின் மூலமாக அருகில் உள்ள ஏடி காலனி பொதுமக்க ளுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே உடனடியாக பொதுப் பணித்துறை கவனம் செலுத்தி அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.  இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கேட்டபோது, நாங்கள் ஆய்வு செய்கிறோம். சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுப்பதாக  என்று தெரிவித்தனர்.

;