உடுமலை, ஜூன் 14- காவல்துறையால் தாக்கப்பட்ட கிராம உதவியாளர் மீதே போட்டப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நான்காவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வாயில் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். உடுமலை காவல்துறையால் தாக்கப் பட்ட கிராம உதவியாளர் செல்வராஜ் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை உதவி யாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நான் காவது நாளான வெள்ளியன்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், கிராம உதவியாளர்கள் காத் திருப்பு போராட்டத்தை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சி யாக உள்ளது. தற்போது உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் ஜமாபந்தி நடை பெற்று வருகிறது. இதில் தீர்வு காணப் பட வேண்டிய பல பிரச்சனைகள் கிராம உதவியாளர்கள் இல்லாததால் நிலுவை யில் உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கு வருவாய்த் துறையின் மூலம் பெற வேண்டிய சான்றிதழ்கள் பெற முடியாமல் உள்ளனர். எனவே வருவாய்த்துறையும், காவல்துறையும் பிடிவாத போக்கை கை விட்டு கிராம உதவியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியரும் தலையிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.