tamilnadu

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் இருவர் கைது

கோவை, ஜன. 18 –  அன்னூர் அருகே நல்லிசெட்டி பாளையத்தில் 13 வயது சிறுமிக்கு  பாலியல்  தொந்தரவு கொடுத்த இரு வரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம்,  அன்னூர், நல்லிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த  13 வயது சிறுமி  தனது நண் பர்களுடன் கடந்த 6ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மாணவியை  வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இரு சக்கர வாக னத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் சோள காட்டிற்குள் வாகனத்தை நிறுத்தி மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச் சிறுமி கூச்சலிடவே  அருகில் இருந்த வர்கள் ஓடிவந்து சிறுமியை காப் பாற்றியுள்ளனர்.  இதற்கிடையே, பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட அரவிந்தை பிடிக்க பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது, அவரது நண்பரும் சட்டக் கல்லூரி மாணவருமான காளிதாஸ் என்பவர் அவரை அங்கிருந்து தப்ப விட்டுள்ளார். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் துடிய லூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அரவிந்த், காளிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். செய்யப் பட்ட இருவர் மீதும் போக்சோ சட் டத்தின் கீழ் துடியலூர்  மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சனியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்  அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. சீருடை அணிந்த காவல் துறையினர் விசாரிக்கக்கூடாது என பாலியல் வன்கொடுமை சட் டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்ட விதிகள் எதை யும் காவல்துறையினர் பின்பற்று வதில்லை. அன்னூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ராஜலட்சுமி தலைமை யில் மாதர் சங்கத்தினர் உடனடி யாக துடியலூர் காவல் நிலையத் திற்கு சென்றனர். இதன்பின் குற்ற வாளியை அருகில் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எப்படி விசாரிக்கலாம். இரவு ஒரு மணிக்கு சிறுமியை அழைத்து வர உங்க ளுக்கு யார் அதிகாரம் அளித்தார் கள் என ஆவேசமாக கேள்வி எழுப் பினர். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் காவல்துறை யினர் சமாதானம் செய்யும் நடவ டிக்கையில் ஈடுபட்டனர். இதனை யடுத்து போராட்டத்தில் ஈடுபடு வோம் என எச்சரிக்கை செய்த பிற கும், ஊடகத்தினர் குவிந்த பிறகே சிறுமியை மாதர் சங்கத்தினரோடு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக் கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக நீதிமன்றம் காவல்துறையினருக்கு அபராதம் விதித்திருந்த நிலையில், பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த எவ் வித பயிற்சியையும் காவல்துறை யினருக்கு இல்லை என்பது தெளி வாகிறது. இதுகுறித்து உரிய இடத் தில் புகார் அளிக்க இருக்கிறோம் என மாதர் சங்கத்தினர் தெரிவித்த னர்.

;