மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான தோழர் கே.சி.கருணாகரனுக்கு, சிபிஎம் நீலகிரி மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டகுழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.