tamilnadu

img

நாணயங்களை காட்சிப்படுத்த பயிற்சி

ஈரோடு, ஏப். 29-ஈரோட்டில் பழங்கால நாணயங்களை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அருங்காட்சியக பணிகளுக்கான பயிற்சி முகாம் திங்களன்று நடைபெற்றது.இரண்டாம் நூற்றாண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய, ஆங்கிலேயர், திப்புசுல்தான் கால நாணயங்கள் சேகரித்து எப்படி காட்சி படுத்துவது என்பது குறித்த சிறப்பு பயிற்சிஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. பல நூற்றாண்டுகள் கடந்த பல நாணயங்களை கண்டறிவது, அவற்றை எப்படி சுத்தம் செய்து காட்சிப்படுத்துவது, நாணயங்கள் யார் பயன்படுத்தியது என்பது குறித்து சில அடையாளங்களை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது. கடந்த 16ஆம் தேதி துவங்கப்பட்டஇந்த பயிற்சி முகாம் 30-ஆம் தேதி வரைஇன்று) நடைபெறுகிறது. இதில் கோவை பகுதியில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சிமுடிவில் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஈரோடு அருங்காட்சியக பொறுப்பாளர் ஜென்சி கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு கலை பொருட்கள்அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையிட வந்து செல்கிறார்கள். ஆனால், வட மாநிலத்தில் மட்டுமே மியூசியாலஜி என்ற பட்டப் படிப்பு உள்ளது. அங்கே படிக்கும் மாணவர்கள் நமது தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு வந்து பொருள்களை பார்வையிட்டும், ஆய்வு செய்தும் செல்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் அந்த படிப்பு இல்லை. அதனை இங்குகொண்டு வந்தால் வரலாற்று உண்மைகளை படிக்கும் மாணவ மாணவியர்கள் அதிகரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

;