அவிநாசி, நவ. 30- அவிநாசி போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவினாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட் சியை சேர்ந்த தனியார் பள்ளியில் 6,7,8 வகுப்பினை சேர்ந்த குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனியன்று நடை பெற்றது. இதில் 18 வயது பூர்த்தி பெற்றவர்கள் மட் டுமே வாகனம் ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனத் தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண் டும். வாகன உரிமச் சான்றிதழ், காப்பீடு உள்ளிட் டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என விளக் கப்பட்டது.