tamilnadu

தொடர் விடுமுறைகளால் குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி,அக்.6 - தொடர்  விடுமுறை என்பதால் பொள்ளாச்சி குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி  அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி உள்ளது. இங்கு வாரந்தோறும்  சனி மற்றும் ஞாயிறு வார  விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பொள்ளாச்சி மற்றும் கோவை, கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர் . இந்நிலையில், தற்போது சனி, ஞாயிறு,  ஆயுதபூஜை முன்னிட்டு  தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள் ளாதால் பல்வேறு இடங்களில் இருந்து பொள்ளாச்சி குரங்கு அருவிக்கு சுற் றுலா  பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.