tamilnadu

img

குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி, செப்.1- பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு  அருவியில்   ஞாயிறன்று சுற்றுலா பயணிகள்  வருகை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி  அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வார  விடு முறை நாட்கள் என்பதாலும், அரசு விடு முறை நாட்களிலும் பொள்ளாச்சி மற்றும்  கோவை, கேரள மாநிலம் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வரு கின்றனர். முன்னதாக, சமீபத்தில்  வால்பாறையில் பெய்த கன மழையின் போது காட்டாற்று  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் குரங்கு அருவியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மழையின் அளவு குறைந்ததும் குரங்கு  அருவிக்கு சுற்றுலா பயணிகளை வனத் துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தில் பாதுகாப்பு தடுப்புக்  கம்பிகள்  இல்லாமல் உள்ளது. இதனால்,  சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத் தக்கூடும். எனவே வனத்துறையினர் உடனடியாக  தடுப்புக் கம்பிகள் அமைத்து ஏற்பாடு செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;